states

img

ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலை

ராஞ்சி, ஜூன் 28- நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு என்ற பெயரில் மோடி அரசால் பழிவாங்கப்பட்ட ஜேஎம்எம் கட்சியின் தலைவரும், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரன்  கடந்த ஜனவரி 31 அன்று அமலாக்கத்துறை யால் கைது செய்யப்பட்டு ராஞ்சியில் உள்ள  பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு தொடர்பான இரு தரப்பு வாதங்கள் கடந்த ஜூன் 13 அன்று நிறைவடைந்த நிலையில், வெள்ளியன்று, நீதிபதி ரங்கோன் முகோபாத்யாய், ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கினார்.

ஜாமீன் வழங்கியதை அடுத்து வெள்ளி யன்று மாலை ஹேமந்த் சோரன் பிர்சா முண்டா மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலைக்கு வெளியே கூடி  இருந்த ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா  சோரன் உள்ளிட்ட ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக மாக வரவேற்றனர். இந்த ஆண்டின்  இறுதியில் ஜார்க்கண்ட்டில் சட்டமன்றத்தேர் தல் நடைபெற உள்ள நிலையில், ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலையாகி இருப்பது அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.